சீன படைகளை சமாளிக்க பாங்காங் ஸோ ஏரியில் புதிய தளவாடத்தை களமிறக்கிய இந்தியா !!

  • Tamil Defense
  • August 17, 2022
  • Comments Off on சீன படைகளை சமாளிக்க பாங்காங் ஸோ ஏரியில் புதிய தளவாடத்தை களமிறக்கிய இந்தியா !!

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரியின் ஒரு பக்கம் இந்தியா வசமாகவும் மற்றொரு பக்கம் சீனா வசமும் உள்ளது மேலும் இந்த ஏரி இரு நாட்டு படைகளும் அடிக்கடி மோதி கொள்ளும் பிரச்சினைக்கு உரிய பகுதியாகும்.

சீனா இந்த ஏரியில் அதிவேக ரோந்து படகுகள் போக்குவரத்து படகுகள் மேலும் இரு கரைகளை இணைக்கும் ஒரு பாலம் ஆகியவற்றை கட்டி உள்ளது இதனால் சீன படைகளின் நகர்வு மிகவும் வேகமாக நடைபெறுகிறது.

ஆனால் இந்திய படைகளின் சாலை மார்க்கமாக நடைபெறும் ஏரியை சுற்றி கொண்டு செல்ல வேண்டும் இதனாலேயே இந்திய படைகள் அதிக நேரம் எடுத்து கொள்ளும் நிலை நிலவி வருகிறது ஆனால் படிப்படியாக இந்தியா இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே பல அதிநவீன அதிவேக ரோந்து படகுகளை பாங்காங் ஸோ ஏரியில் இந்திய தரைப்படை பயன்படுத்தி வருகிறது மேலும் இந்திய கடற்படையின் மார்க்கோஸ் சிறப்பு படையினரும் இந்த ஏரியில் இயங்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த நிலையில் தற்போது இந்தியா Landing Craft Assault LCA எனப்படும் நீர் மார்க்கமாக படைகளை குவிக்கும் பிரத்தியேக கலன் ஒன்றை பாங்காங் ஸோ ஏரியில் பயன்படுத்த துவங்கி உள்ளது, இதன் மூலம் சுமார் 35 வீரர்கள் மற்றும் அவர்களுக்கான தளவாடங்களை ஏரியின் எந்த பகுதிக்கும் வேகமாக கொண்டு செல்ல முடியும்.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கோவாவில் உள்ள Aquarius Shipyard Limited அக்வேரியஸ் கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைத்து இந்திய தரைப்படைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.