உள்நாட்டு தயாரிப்பு குழு ட்ரோன்களை படையில் இணைத்த இந்தியா !!

இந்திய தரைப்படை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட குழுவாக இயங்கும் ஆளில்லா விமானங்களை (Swarm Drones) தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கில் படையில் இணைத்துள்ளது.

இந்திய தரைப்படை இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் Swarm Drone களை இந்திய தரைப்படையின் இயந்திரமயமாக்கப்பட்ட படைகளில் இணைத்து வருவதாகவும் இதன் மூலம் களத்தில் உள்ள கமாண்டர்களுக்கு மேலும் சிறப்பாக செயல்பட முடியும் எனவும், அதிக உயர பகுதிகளில் இயங்கும் இத்தகைய ட்ரோன்களை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Swarm Drone களை இந்திய தரைப்படை இரண்டு இந்திய நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது, இது தவிர Make-2 எனும் திட்டத்தின்கீழ் A-SADS Autonomous Surveillance & Armed Drone Swarm அதாவது தானாகவே இயங்கும் ஆயுதம் தாங்கிய கண்காணிப்பு ஆளில்லா குழு விமானங்களை தயாரிக்க உள்ளது.

மேற்குறிப்பிட்ட Swarm Droneகளை கொண்டு உளவு கண்காணிப்பு தாக்குதல் தகவல் சேகரிப்பு போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதும் இவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் அல்லது ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை கொண்டு நிறுத்த முடியாது என்பதும் இவற்றின் சிறப்பாகும்.