விமானப்படை தினத்தன்று செயல்பாட்டுக்கு வரும் இந்திய விமானப்படையின் முதல் LCH படையணி !!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 90ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டு இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயம் உள்ளது அதாவது உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை கொண்ட முதலாவது படையணி இந்திய விமானப்படை தின விழாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு படையணியிலும் 10 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருக்கும் இவை LSP – Limited Series Production ரகத்தை சேர்ந்தவை ஆகும் இவை ரஷ்ய Mi-25 மற்றும் Mi-35 தாக்குதல் ஹெலிகாப்டர்களை மாற்ற பயன்படுத்தப்படும்.
மேலும் இந்திய விமானப்படை ஒட்டுமொத்தமாக சுமார் 65 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களையும், இந்திய தரைப்படை ஒட்டுமொத்தமாக சுமார் 95 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளன.
இந்திய தரைப்படையின் AAC – Army Aviation Corps அதாவது தரைப்படை வான்படை கோர் தனது முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் படையணியை இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது இதே ஆண்டில் மேலும் 4 LSP வரிசை இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.