ஆஸ்திரேலியாவில் பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on ஆஸ்திரேலியாவில் பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்திய விமானப்படை !!

ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெற உள்ள PITCH BLACK பன்னாட்டு விமானப்படை கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஸ்திரேலிய விமானப்படை நடத்தும் இந்த பன்னாட்டு போர் பயிற்சியில் QUAD நாடுகள் உட்பட 17 நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா,ஜப்பான், தென் கொரியா, கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகியவை இந்த ஆண்டு கலந்து கொள்கின்றன.

இந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட 17 நாடுகளில் இருந்து சுமார் 2500 வீரர்கள் மற்றும் 100க்கும் அதிகமான போர் விமானங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் இன்னும் இரண்டு வாரத்தில் இந்த பிரமாண்ட போர் ஒத்திகை தொடங்கும் எனவும் ஆஸ்திரேலிய விமானப்படை கூறியுள்ளது.

இந்த பிரமாண்ட போர் ஒத்திகை கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.