இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை 12 LUH ரக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதாவது HAL ஏற்கனவே தயாரிப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் , இரண்டு ஹெலிகாப்டர்களின் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைக்கு இத்தகைய 12 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.