சீனா உடனான யுத்தத்திற்கு இந்திய விமானப்படை தளபதி வகுத்துள்ள திட்டம் !!

சீனா உடனான யுத்தத்திற்கு தயாராகும் விதமாக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி ஒரு திட்டம் ஒன்றை வகுத்துள்ளார், அந்த வகையில் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசும் போது நேசிக்கப்படுவதை விட நம்மை கண்டு பயப்படுவதே சிறப்பானது என்றும் இனி நடக்க போகும் சண்டைகள் மிகவும் இதுவரை நாம் பார்க்காத வகையில் இருக்கும் ஆகவே அத்தகைய சூழல்களை எதிர்கொள்ள வான்படை வீரர்களை விடவும் கல்வி கற்ற வீரர்கள் தான் தேவை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் சீனாவுடன் எதிர்காலத்தில் போர் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் இலகுரக தேஜாஸ் போர் விமானங்கள், 114 பல திறன் போர் விமானங்கள், S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆம்கா போர் விமானங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் பேசுகையில் எதிரிகள் வழக்கமான போர் முறைகளை களைந்து விட்டு புதிய முறைகளுக்கு மாறுகையில் நாமும் அதற்கேற்ப சிறிய கணிணி அமைப்புகள் முதல் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் வரையிலான அதிநவீன ஆயுதங்களை நாம் பயன்படுத்த துவங்க வேண்டும், இந்தியாவின் பாரம்பரிய ராணுவ கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் எனவும்

இதனை அவர் தில்லியில் உள்ள United Services Institute மையத்தில் நடைபெற்ற மேஜர் சமீர் சின்ஹா கருத்தரங்கில் “Indian Airforce : Present status & the way ahead” அதாவது இந்திய விமானப்படை நிகழ்கால நிலவரம் மற்றும் எதிர்கால பாதை எனும் தலைப்பின் கீழ் பேசும்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.