10 படையணிகள் அளவிற்கு தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களுக்கு ஆர்டர் !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on 10 படையணிகள் அளவிற்கு தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களுக்கு ஆர்டர் !!

வானூர்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் இந்திய விமானப்படை 6 படையணிகள் அளவுக்கு தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களை வாங்க உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

அவற்றை தொடர்ந்து இரண்டாவது கட்ட ஆர்டரின் போது மேலும் நான்கு படையணிகள் அளவிலான மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 போர் விமானங்கள் வாங்கப்படும் எனவும் கூறினார்.

தேஜாஸ் மார்க்-2 விமானங்களுக்கான சோதனை அடுத்த ஆண்டு துவங்கும் பின்னர் 2028-2029 வாக்கில் அவற்றின் தயாரிப்பு பணிகள் துவங்கும்; இதற்காக நாசிக்கில் உள்ள மிக் பணிமனை தேஜாஸ் மார்க்-2 தொழிற்சாலையாக மாற்றியமைக்கப்படும்.

தேஜாஸ் மார்க்-1 Tejas Mk1 விமானங்களை போலவே இவற்றிலும் எரிபொருள் நிரப்புவதற்கான குழாய் மூக்கு பகுதியில் இருக்கும் தேவைப்பட்டால் அவற்றை கழற்றி மாற்றி கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.