இந்திய விமானப்படை ELINT – Electronic Intelligence மற்றும் COMINT – Communication Intelligence ஆகிய தொழில்நுட்பங்களை எந்த இடத்திலும் பயன்படுத்தும் வகையில் வாகனம் சாரந்த அமைப்புகளை உருவாக்க இந்திய நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது இதற்கென புதிதாக தொழில்நுட்ப அமைப்புகள் அல்லது மென்பொருள் எதையும் உருவாக்க வேண்டியதில்லை ஏற்கனவே உள்ளவற்றை அஸெம்பிள் செய்து அதாவது ஒருங்கிணைத்து மேற்குறிப்பிட்ட வாகனங்கள் சார்ந்த அமைப்புகளை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்புகளை கொண்டு எதிரிகளின் ரேடார் போன்ற மின்னனு அமைப்புகள் வெளியிடும் சிக்னல்களை ஆய்வு செய்து தகவல் சேகரிக்கவும் எதிரிகளின் தகவல் தொடர்பு அமைப்புகளை இடைமறித்து தகவல் சேகரிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புகள் 10 டன்கள் எடை கொண்ட Ashok Leyland Stallion 6×6 லாரியில் கட்டமைக்கப்படும், இது குண்டு துளைக்காத கவச அமைப்புடன் NBC – Nuclear, Chemical & Biological அணு, வேதியியல், உயிரியல் தாக்குதல்களின் போதும், -40 டிகிரி முதல் 50 டிகிரி வரையிலான சூழலிலும், 16000 அடி உயரம் கொண்ட பகுதியிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்திய விமானப்படை DRDO எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் BEL எனும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த ELINT மற்றும் COMINT அமைப்புகளை பயன்படுத்தி வருவது கூடுதல் தகவல் ஆகும்.