எல்லையில் இருந்து 10கிமீ தொலைவு வரை சீன விமானங்கள் பறக்க கூடாது இந்தியா அறிவுறுத்தல் !!
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை கட்டுபாட்டு கோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவு வரை எந்தவொரு ராணுவ விமானங்களும் பறக்க கூடாது என சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்தி உள்ளது.
இதனை கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று சூஷூல் மோல்டோ பகுதியில் நடைபெற்ற இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பு சீன தரப்பிடம் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராணுவ கமாண்டர்கள் குழுவில் இந்திய விமானப்படையின் ஏர் கமோடர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரும் மூத்த தரைப்படை அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்னர் சீன விமானப்படையின் J-11 ரக போர் விமானம் ஒன்று எல்லை கட்டுபாட்டு கோட்டிற்கு மிகவும் அருகே பறந்த நிலையில் இந்திய விமானப்படையும் போர் விமானங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
அதே போல சில நாட்களுக்கு முன்னர் இந்திய விமானப்படை வானூர்திகள் வீரர்கள் தளவாடங்கள் மற்றும் சப்ளைகளை நகரத்துவதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தது கூடுதல் தகவல் ஆகும்.