Sukhoi-30 சுகோய்-30 போர் விமானத்தை இயக்கும் நாடுகளுக்கு பிரம்மாஸ்-A ஏவுகணையை வழங்க இந்தியா ஆர்வம் !!
1 min read

Sukhoi-30 சுகோய்-30 போர் விமானத்தை இயக்கும் நாடுகளுக்கு பிரம்மாஸ்-A ஏவுகணையை வழங்க இந்தியா ஆர்வம் !!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் ARMY – 2022 ராணுவ கண்காட்சியில் இந்தியாவின் Brahmos Aerospace நிறுவனம் கலந்து கொண்டுள்ளது அங்கு அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பிரவின் பதாக் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் சீனா தவிர்த்து Sukhoi-30 சுகோய்-30 பல திறன் போர் விமானத்தை இயக்கும் அனைத்து நாடுகளுக்கும் போர் விமானத்தில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்ட Brahmos-A பிரம்மாஸ்-ஏ ரக ஏவுகணையை விற்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 450 கிலோமீட்டர் தொலைவு வரை பாயக்கூடிய இந்த ஏவுகணை தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கி அழிக்க உதவும், 2.5 டன்கள் எடை கொண்ட இந்த ஏவுகணையை சிறு மாறுதல்கள் செய்து விமானம் சுமக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

இந்த Brahmos – A ஏவுகணையை போர் விமானத்தின் இறக்கையில் பொருத்த முடியாது ஆகவே அதனை போர் விமானத்தின் அடியில் நடுப்பகுதியில் தான் பொருத்தி சுமந்து செலல முடியும், நடுப்பகுதியை வலுப்படுத்த Hindustan Aeronautics Limited HAL நிறுவனத்தின் உதவி கண்டிப்பாக தேவைப்படும் காரணம் அந்த பணியை அவர்கள் தான் இந்திய விமானப்படைக்கு செய்து கொடுத்தனர்.

அங்கோலா, அல்ஜீரியா, அர்மீனியா, பெலாரஸ், சீனா, இந்தோனேசியா, கஸகஸ்தான், மலேசியா, உகாண்டா, மலேசியா, வெனிசுவேலா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின விமானப்படைகள் சுகோய்-30 Sukhoi-30 போர் விமானத்தை இயக்கி வருகின்றன.

Brahmos-A வழக்கமான Brahmos ஏவுகணையை போல கூட்டு தயாரிப்பில் உருவானது அல்ல மாறாக முழுக்க முழுக்க Brahmos Aerospace நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.