அர்ஜென்டினாவுக்கு தேஜாஸ் விமானத்தின் தொழில்நுட்ப தரவுகளை பகிர உள்ள இந்தியா !!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா இந்தியாவின் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் மீதான தனது ஆர்வத்தை வெளிபடுத்தி உள்ளது இதனை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து இந்தியா இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் தொழில்நுட்ப தரவுகள் குறித்து நேரடியாக விளக்க அர்ஜென்டினா விமானப்படையின் போர் விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை இந்தியா வரவழைத்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி அர்ஜென்டினா இலகுரக தேஜாஸ் LCA TEJAS போர் விமானத்தின் பாகங்களை இந்தியாவில் தயாரித்து அர்ஜென்டினாவுக்கு அனுப்பி அங்கு வைத்து அசம்பிள் (Assemble) செய்ய விரும்புவதாக தெரிகிறது.

அர்ஜென்டினா விமானப்படையின் தலைமை தளபதி ஜெனரல் சேவியர் ஐசக் எந்த போர் விமானம் அர்ஜென்டினா விமானப்படைக்கு தேர்வு செய்யப்பட்டாலும் அதனை மேற்குறிப்பிட்ட முறையில் அர்ஜென்டினாவிலேயே அசம்பிள் செய்யவும்,

தேர்வு செய்யப்படும் போர் விமானத்தின் ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனமானது அர்ஜென்டினா ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றும் சொந்தமாக உருவாக்கிய ஆயுதங்களை போர் விமானத்துடன் இணைக்கும் வகையில் மாற்றங்கள் செய்ய உதவ வேண்டும் எனவும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

தேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்கும் இந்தியாவின் Hindustan Aeronautics Limited நான் நிறுவனம் போர் விமானத்தில் Quartz மூக்கு பகுதி, Martin Baker விமானி இருக்கைகள் மற்றும் எரிபொருள் நிரப்ப உதவும் குழாய் போன்ற பிரிட்டிஷ் தயாரிப்பு பாகங்கள் இல்லாமல் விமானத்தை சப்ளை செய்ய முடியும் என அர்ஜென்டினா விமானப்படையிடம் உறுதி அளித்துள்ளது.

அர்ஜென்டினா விமானப்படைக்கான போர் விமான தேர்வில் ரஷ்யா தனது Mig-29 மற்றும் Mig-35, அமெரிக்கா F-16 மற்றும் சீனா தனது JF-17 ஆகிய போர் விமானங்களை ஆஃபர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.