எல்லை பிரச்சினைக்கு இடையே ரஷ்யாவில் ராணுவ பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்திய சீன படைகள் !!

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சினை கத்தி முனையில் இருக்கும் நிலையில் இரு நாட்டு படைகளும் ரஷ்யா இந்த மாதம் இறுதியில் நடத்தும் VOSTOK – 2022 வோஸ்டோக் 2022 பன்னாட்டு ராணுவ பயிற்சிகளில் கலந்து கொள்ள உள்ளன.

ஆனால் இந்தியா மற்றும் சீன படைகள் இந்த பயிற்சிகளின் போது நேர் எதிர் அணிகளில் இருக்குமா அல்லது இரண்டு நாட்டு படைகளும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே வேறு பயிற்சிகளில் பங்கு பெறுமா என்பது பற்றிய எந்த விதமான தகவல்களும் இல்லை.

கடந்த ஆண்டு இந்திய சீன படைகள் ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரென்பர்க் பகுதியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் Shanghai Cooperation Organisation SCO பன்னாட்டு ராணுவ பயிற்சியில் ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.