புதிய அதிநவீன SSLV ராக்கெட்டை முதல்முறையாக ஏவ உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • August 3, 2022
  • Comments Off on புதிய அதிநவீன SSLV ராக்கெட்டை முதல்முறையாக ஏவ உள்ள இந்தியா !!

வருகிற 7ஆம் தேதி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இஸ்ரோ தனது புதிய அதிநவீன SSLV ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் ஏவ உள்ளது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.18 மணியளவில் SSLV-D1 ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளை கொண்டு சிறிய செயற்கைகோள்களை ஏவ முடியும் முன்னர் சிறிய செயற்கைகோள்களை கூட பெரிய கனரக ராக்கெட்டுகளை கொண்டு ஏவ வேண்டிய நிலை இருந்தது, தற்போது இந்த ராக்கெட் அந்த நிலையை மாற்றி உள்ளது மேலும் இதனால் செலவும் குறையும் என்பது சிறப்பாகும்.

முதல்முறையாக விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் EOS-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.