இஸ்ரேலுடன் இணைந்து HERON TP ட்ரோன்களை தயாரிக்கும் இந்தியா !!
1 min read

இஸ்ரேலுடன் இணைந்து HERON TP ட்ரோன்களை தயாரிக்கும் இந்தியா !!

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலுடன் இணைந்து HERON TP ரக ஆளில்லா விமானங்களை கூட்டு தயாரிப்பு முறையில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த தயாரிப்பு திட்டத்தின் மூலமாக இந்தியாவின் முப்படைகளுக்கான ஆளில்லா விமான தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி ஏற்றுமதி செய்யவும் முடியும் என கூறப்படுகிறது.

இந்த HERON TP ரக ஆளில்லா விமானங்கள் 45 மணி நேரங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை எனவும் சுமார் 45,000 அடி உயரம் வரை பறக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆளில்லா விமானங்களில் ATOL – Automatic Taxi- Takeoff & Landing அதாவது தானியங்கி மேலேழும்புதல் மற்றும் தரையிறக்கம் , SATCOM – Satellite Communication செயற்கைகோள் தொலைதொடர்பு ஆகிய திறன்களை கொண்டிருக்கும்.

இது தவிர ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் HINDUSTAN AERONAUTICS LIMITED பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் Defence Research & Development Organisation உடன் இணைந்து வேறு இரண்டு ஆளில்லா விமானங்களையும் உருவாக்கி வருகிறது.