24 ஃபிரெஞ்சு மிராஜ் விமானங்களை கொண்டு 2 மிராஜ் படையணிகளை உயிர்ப்பிக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • August 25, 2022
  • Comments Off on 24 ஃபிரெஞ்சு மிராஜ் விமானங்களை கொண்டு 2 மிராஜ் படையணிகளை உயிர்ப்பிக்கும் இந்தியா !!

இந்தியா ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து 24 ஒய்வு பெற்ற Mirage-2000 மிராஜ்-2000 போர் விமானங்களை வாங்கி அவற்றை கொண்டு இந்திய விமானப்படையில் உள்ள 2 படையணி மிராஜ்-2000 விமானங்களை உயிர்ப்பிக்க திட்டமிட்டு உள்ளது.

சுமார் 300 க்கும் அதிகமான பாகங்களை இவற்றில் இருந்து பிரித்தெடுத்து அவற்றை இந்திய விமானப்படையின் Mirage-2000 மிராஜ்-2000 போர் விமானங்களை புதுப்பித்து வருகிற 2035ஆம் ஆண்டு வரை அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிப்பு செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஃபிரெஞ்சு விமானப்படை இத்தகைய 24 போர் விமானங்களை தனது கிடங்கில் இருந்து வெளியே எடுத்து கடல் மார்க்கமாக இந்தியா நோக்கி அனுப்பி வைத்த நிலையில் அவை ஒவ்வொன்றாக தற்போது இந்தியா வந்து சேர்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் இதே போல ஃபிரெஞ்சு விமானப்படையின் ஒய்வு பெற்ற ஜாகுவார் Jaguar விமானங்களை இந்தியாவுக்கு கொடுத்தது அவற்றை கொண்டு இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானங்களை இந்தியா புதுப்பித்து பயன்படுத்தி வருகிறது.

இந்திய விமானப்படை வருகிற 2034ஆம் ஆண்டு வரை தன்னிடம் எப்போதும் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட Darin-3 ஜாகுவார் போர் விமானங்களை பயன்படுத்த தயாராக வைத்திருக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.