Bharat Forge நிறுவனம் தயாரித்த 105 மில்லிமீட்டர் அளவும் 37 காலிபர் திறனும் கொண்ட Garuda Ultra Light Gun கருடா இலகுரக பிரங்கி அமைப்புகளை வாங்க விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு 4×4 வாகனத்தில் பொருத்தப்பட்ட இந்த பிரங்கியானது வெளி உலகிற்கு கடந்த 2014ஆம் ஆண்டே அறிமுகமானது அதன் பின்னர் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருமாற்றம் அடைந்துள்ளது.
கடந்த ஆறு மாத காலமாக இந்திய தரைப்படை இந்த கருடா இலகுரக பிரங்கிகளை பாகிஸ்தான் உடனான மேற்கு எல்லையோரம் மற்றும் சீனா உடனான கிழக்கு எல்லையோர பகுதிகளில் மிகவும் தீவிரமாக சோதனை செய்ததில் திருப்தி அடைந்து உள்ளதாகவும் அடுத்த ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும் கூறப்படுகிறது.
கருடா பிரங்கியின் மேம்படுத்தப்பட்ட மற்றோரு தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட வடிவமான 4×4 வாகனத்தில் பொருத்தப்பட்ட 155மில்லிமீட்டர் அளவும்/39 காலிபர் திறனும் கொண்ட கடந்த சில மாதங்களாக இந்திய தரைப்படையின் சோதனையில் உள்ளது இதுவும் இந்திய தரைப்படையின் ஆர்டர்களை நிச்சயமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பிரங்கிகளை எந்த நிலபரப்பிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் இவற்றை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் அவ்வளவு இலகுவானது, ஆகவே இவற்றை Go Anywhere Gun என அழைக்கிறார்கள், சீனாவுக்கு எதிராக இவை மலையக போரில் மிகப்பெரிய அளவில் நமக்கு உதவி புரியும் என்றால் அது மிகையாகாது.