இலங்கையில் சீன கப்பல்; தென் சீன கடலில் போர் பயிற்சி மேற்கொள்ள இந்திய கடற்படை திட்டம் !!

  • Tamil Defense
  • August 15, 2022
  • Comments Off on இலங்கையில் சீன கப்பல்; தென் சீன கடலில் போர் பயிற்சி மேற்கொள்ள இந்திய கடற்படை திட்டம் !!

சீனா தனது அத்துமீறலை அதிகம் நிகழ்த்தக்கூடிய பகுதிகளில் ஒன்று தான் தென்சீன கடல்பகுதி, இங்கு இந்திய கடற்படை அந்த பகுதியை சேர்ந்த நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுடன் மேற்குறிப்பிட்ட கடற்படை போர் பயிற்சிகளை மேற்கொள்ள விருமபுகிறது இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் விரிவாக்க நடவடிக்கை சார்ந்த அத்துமீறல்களை அவ்வப்போது சந்தித்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சீனாவுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாகவும் சீனாவுக்கு இந்தியா அடிபணியாது என்பதை காட்ட விரும்புவதாகவும் மேலும் தென் சீன கடல் பகுதி நாடுகளை அங்கு ராணுவ பயிற்சி மேற்கொள்ள ஊக்குவித்து வருவதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.