கண்காணிப்பு கப்பல் விவகாரம் சீனாவை காட்டமாக விமர்சித்த இந்தியா !!
1 min read

கண்காணிப்பு கப்பல் விவகாரம் சீனாவை காட்டமாக விமர்சித்த இந்தியா !!

சீனாவின் கண்காணிப்பு கப்பல் Yuan Wang 5 சமீபத்தில் இலங்கை வந்தது பின்னர் தற்போது அங்கிருந்து சீனா நோக்கி புறப்பட்டு சென்றது இதற்கிடையே இந்தியா சீன கப்பலை எதிர்கொள்ள பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை களமிறக்கியது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது அதற்கு சீனா இந்தியா தேவையில்லாமல் இலங்கை சீன உறவில் மூக்கை நுழைப்பதாக விமர்சித்து இருந்தது.

மேலும் ஆதாரமற்ற குள்றசாட்டுகளை அடிப்படையாக வைத்து இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குவதாக மோசமாக விமர்சனம் செய்திருந்த நிலையில்

தற்போது இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது அதாவது இலங்கைக்கான சீன தூதரின் இந்தியா மீதான மோசமான கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தல்ல மாறாக அவரது நாட்டின் பார்வை மற்றும் அரசியல் கொள்கையை சுட்டி காட்டுவதாக உள்ளது எனவும்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு தேவை மிரட்டல் அல்ல மாறாக ஆதரவும் உதவியும் தான் தேவை ஆனால் சீனா இலங்கையை கடன்களை வைத்து மிரட்டுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.