இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் சர்வதேச சந்தை குறிப்பாக ஆசிய சந்தையை குறிவைத்து தனது டோர்னியர் பயணிகள் விமானத்தை ஆஃபர் செய்ய உள்ளது.
ஏற்கனவே 19 இருக்கை கொண்ட தனது இரண்டு Dornier – 228 டோர்னியர்-228 பயணிகள் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் குத்தகைக்கு விட்டுள்ள நிலையில் தற்போது அதே நடைமுறையை பின்பற்றி அல்லது விற்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
17 மற்றும் 19 இருக்கை கொண்ட இரண்டு வடிவங்களை HAL ஆஃபர் செய்கிறது இவற்றை சரியான ஒடுதளங்கள் அல்லது குறுகிய ஒடுதளங்கள் வானூர்திகள் சென்றடைவதற்கு மிகவும் கடினமான பகுதிகளில் வான் போக்குவரத்து சேவை அளிக்க விமான நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் தலையாய சிறப்பாகும்.
இந்த பயணிகள் போக்குவரத்து டோர்னியர் -228 Dornier-228 ரக விமானங்கள் மணிக்கு 428 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் திறன் கொண்டது, இரவு மற்றும் பகல் ஆகிய நேரங்களிலும் இயங்கும் என்பது இதன் சிறப்பாகும்.
கடந்த 2017ஆம் ஆண்டு DGCA பயணிகள் விமான போக்குவரத்து இயக்குனரகம் மேற்குறிப்பிட்ட விமானத்திற்கு பயணிகள் போக்குவரத்திற்கு தகுதியானது என சான்றளிக்கும் A சான்றிதழ் அளித்தது கூடுதல் தகவல் ஆகும்.