தைவானுக்கு ஆதரவாக பராகுவே நாட்டிற்கு உதவி சீனாவின் மூக்கை அறுத்த இந்தியா !!

  • Tamil Defense
  • August 13, 2022
  • Comments Off on தைவானுக்கு ஆதரவாக பராகுவே நாட்டிற்கு உதவி சீனாவின் மூக்கை அறுத்த இந்தியா !!

தென் அமெரிக்க நாடான பராகுவே தைவானுக்கு ஆதரவான நாடாகும், மொத்தமாகவே 15 நாடுகள் தான் தைவானுடன் தூதரக அளவிலான உறவுகளை கொண்டுள்ள நாடுகள் ஆகும் அதில் பராகுவேயும் ஒன்றாகும்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசிகள் இன்றி பராகுவே தவித்து வந்த போது சீனா தாங்கள் உதவ தயாராக உள்ளதாகவும் ஆனால் பராகுவே அரசாங்கம் தைவான் உடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பராகுவே மற்றும் தைவான் அரசுகள் மீது மிகப்பெரிய பாரத்தை சுமத்தியது சீனாவின் தயவின்றி கொரொனா தடுப்பூசிகளை பெற வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே தைவான் அரசு இதுகுறித்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் பராகுவேக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் இந்தியா அதனை ஏற்று கொண்டது.

இந்தியா சுமார் 2 லட்சம் டோஸ் கோவாக்ஸின் கொரொனா தடுப்பூசிகளை பராகுவே நாட்டிற்கு அனுப்பி வைத்தது இந்த செயல் மூலமாக சீனாவின் கொட்டத்தை சர்வதேச அளவில் இந்தியா அடக்கி உள்ளது.

இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு க்வாட் நாடுகளும் சீனாவின் இத்தகைய வில்லத்தனத்தை எதிர்க்க சுமார் 100 கோடி டோஸ் கொரொனா தடுப்பூசிகளை தயாரித்து உலகளாவிய ரீதியில் உதவ திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.