இந்திய விமானப்படை அமெரிக்காவிடம் இருந்து கடைசி ஐந்து AH-64E APACHE Guardian ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை பெற்று கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து நாட்டில் இருந்து இயங்கும் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் கணிப்பு நிறுவனமான Janes Publication இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதாவது ஒரு AN-124 ரக பிரமாண்ட சரக்கு விமானத்தின் மூலமாக இந்திய விமானப்படையின் மிகப்பெரிய தளமான ஹிண்டன் படை தளத்தில் இவை அமெரிக்காவில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்டு டெலிவரி செய்யப்பட்டு உள்ளன.
இந்தியா ஒட்டுமொத்தமாக 22 AH-64E APACHE GUARDIAN ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது அவற்றில் தலா 10 ஹெலிகாப்டர்களை கொண்ட இரண்டு படையணிகள் செயல்பாட்டுக்கு வரும் மீதமுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் ரிசர்வில் இருக்கும்,
மேலும் இந்த இரண்டு APACHE படையணிகளும் மேற்கு எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் படைத்தளம் மற்றும் கிழக்கு எல்லையோரம் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாத் படைத்தளம் ஆகியவற்றில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா சுமார் 3.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இருபத்தி இரண்டு AH-64E APACHE GUARDIAN தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பதினைந்து CH-47F Boeing CHINOOK கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.