திங்கட்கிழமை அன்று இந்தியா இலங்கை விமானப்படையிடம் ஒரு டோர்னியர் Dornier 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் ஒப்படைத்தது.
கட்டுநாயாகா விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமான ஒப்படைப்பு விழாவில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பக்லே, இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் கோர்மாடே, இலங்கை முப்படை அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை கடந்த 2018ஆம் ஆண்டு இத்தகைய இரண்டு Dornier 228 ரக கடல்சார் கண்காணிப்பு விமானங்களை தந்துதவ வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் முதலாவது விமானம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது மற்ற விமானம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இது பற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இலங்கை மக்களுக்கான இந்த பரிசு இலங்கையை இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்ற உதவும் என தெரிவித்துள்ளது.
வைஸ் அட்மிரல் கோர்மாடே இந்திய அமைத்திப்படை நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக இந்திய கடற்படை சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.