சீன கப்பலை வேவு பார்க்க உளவு செயற்கைகோள்கள் மற்றும் போர் கப்பலை களமிறக்கிய இந்தியா !!

சீனாவின் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் அனுமதியோடு நங்கூரமிட்டு நிலை கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா சீனாவின் கண்காணிப்பு கப்பலை வேவு பார்க்க இரண்டு GSAT-7 ரக செயற்கைகோள்கள், RISAT மற்றும் EMISAT ஆகிய செயற்கைகேள்கள் மற்றும் இந்திய கடற்படையின் தகவல் தொடர்பு கப்பல் ஒன்றையும் களமிறக்கி உள்ளது.

மேலும் சீன கண்காணிப்பு கப்பலின் சிக்னல்களை தடுக்க EMISAT செயற்கைகோளில் உள்ள கவுதில்யா மின்னனு உளவு கருவி Kautilya Electronic Inteligence Package பயன்படுத்தி வரப்படுகிறது.

மேலும் இந்தியாவால் தற்போது சீன கண்காணிப்பு கப்பலின் சிக்னல்களை இடைமறிக்கவும் தடுத்து திருப்பி வந்த இடத்திற்கே அனுப்ப முடியும் மேலும் சீன செயற்கைகேள்களில் இருந்து வரும் சிக்னல்களையும் தடுக்க முடியும்.

அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து கிடைக்க பெறும் சிக்னல்கள் சீன கப்பலை சென்றடையாமல் தடுக்கும் இதன் காரணமாக சீன கண்காணிப்பு கப்பலால் சரியான தகவல்களை பெற முடியாமலும் குழப்பம் ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.