இந்திய சீன உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளது வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் !!

தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரில் உள்ள சுலாலங்கார்ன் பல்கலைகழகத்தில் செய்தியாளர்கள் இடையே இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு எல்லை பிரச்சினைக்கு பிறகு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சீனா இடையே நட்புறவு மலர்ந்தால் இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக அமையும் ஆனால் தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை.

சீனாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து நட்புறவுடன் செயலாற்ற வேண்டும் இது இரு நாடுகளின் நலன்களுக்கும் அத்தியாவசியமானது ஆகவே சீனர்கள் விழித்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.