இந்திய சீன எல்லையோரம், இந்திய அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி; சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையா !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on இந்திய சீன எல்லையோரம், இந்திய அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி; சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையா !!

லடாக்கில் இன்னும் எல்லை பிரச்சினை தீராத நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு அருகே அமெரிக்கா மற்றும் இந்திய ராணுவங்கள் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

தற்போது தைவானில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி சென்று சீனாவை கடுப்பேற்றிய நிலையில் தற்போது இந்தியா உடனான இந்த ராணுவ பயிற்சிகளும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் Yudh Abhyas யுத் அப்யாஸ் என்ற பெயரில் நடைபெறும் இருதரப்பு ராணுவ பயிற்சிகள் இந்த ஆண்டு சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோட்டில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவு கூட இல்லாத ஹிமாச்சல பிரதேசத்தின் ஆலி பகுதியில் நடைபெற உள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், பல்வேறு வகையான பயிற்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது, இருதரப்பில் இருந்தும் கலந்து கொள்ள உள்ள படையணிகள் பற்றிய விவரங்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை.

சுமார் 18 ஆண்டுகளாக இந்த கூட்டு ராணுவ போர் பயிற்சிகள் நடைபெற்று வருவதும் கடந்த ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.