சண்டையை தவிர்க்க இந்தியா சீன விமானப்படைகள் இடையே நேரடி தொலைபேசி இணைப்பு !!

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on சண்டையை தவிர்க்க இந்தியா சீன விமானப்படைகள் இடையே நேரடி தொலைபேசி இணைப்பு !!

கடந்த வாரம் லடாக்கின் சூஷூல் மோல்டோ செக்டாரில் நடைபெற்ற இந்திய சீனா இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தைகளின் போது சீன விமானப்படையின் அத்துமீறல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை பிரச்சினை இன்றி தீர்க்கும் வகையில் இரண்டு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையே நேரடி தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இனி அடுத்தடுத்து நடக்கவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பு விமானப்படை அதிகாரிகளும் நேரடி தொலைபேசி எப்படி எங்கு அமைப்பது என்பது பற்றி கலந்தாலோசித்து முடிவு செய்வர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பு அதிகாரிகள் இந்திய தரைப்படையின் மேஜர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரி தலைமையில் கலந்து கொண்டனர் அதில் இந்திய விமானப்படை ஏர் கமோடர் ஒருவரும் இருந்தார்.

கல்வான் மோதலுக்கு பிறகு இத்தகைய இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தையில் விமானப்படை அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.