ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காததற்கு இதுவே காரணம் சிங்கப்பூர் பிரதமர் !!
1 min read

ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காததற்கு இதுவே காரணம் சிங்கப்பூர் பிரதமர் !!

சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் அப்போது அவர் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் அது சார்ந்த விஷயங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர் ரஷ்யாவை கண்டிக்கும் வகையில் மிகவும் கடுமையான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியா சீனா வியட்நாம் லாவோஸ் போன்ற நாடுகள் பல்வேறு காரணங்களால் வாக்களிக்காமல் விலகி கொண்டன.

இந்தியா விலகி கொண்டதற்கு ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு உள்ள வலுவான ராணுவ ரீதியான உறவுகள் அதாவது இந்தியா ரஷ்யாவில் இருந்து பெருமளவில் ஆயுதங்களை வாங்குவது தான் காரணம் என கருதுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியென் லூங் தெரிவித்தார்.

ஆனால் சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களித்தது மட்டுமின்றி ரஷ்யா மீது தனிப்பட்ட முறையிலும் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும் ஆனால் ரஷ்யா அல்லது அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவில்லை எனவும் கூறிய அவர்

சிறிய நாடோ பெரிய நாடோ ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் மற்ற நாடுகளால் மதிக்கப்பட வேண்டும் என்ற தனித்துவமிக்க நிலைபாட்டில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளதாகவும் அதற்கு உதாரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு கிரனெடா நாட்டின் மீதான அமெரிக்க படையெடுப்பு, 1978 கம்போடியா மீதான வியட்நாம் படையெடுப்பு ஆகியவற்றை எதிர்த்து ஐ.நா சபையில் சிங்கப்பூர் வாக்களித்ததை சுட்டி காட்டினார்.

சிங்கப்பூர் இன்று இதனை எதிர்த்து பேசாவிட்டால் நாளை சிங்கப்பூர் மீது படையெடுப்பு நிகழ்ந்தால் அதனை தட்டி கேட்க எந்த நாடும் முன்வராது எனவும் தான்தோன்றித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு சர்வதேச அளவிலான சட்ட விதிமுறைகளை அனைத்து நாடுகளும் மதித்து பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.