தைவான் மீது சீனா படையெடுத்தால் இந்தியா சீன எல்லையில் போர் களத்தை உருவாக்க வேண்டும் அமெரிக்க அதிகாரி !!

ஒய்வு பெற்ற மூத்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றிய அதிகாரியான எல்ப்ரிட்ஜ் கோல்பி சமீபத்தில் பலரின் கவனத்தை ஈர்க்கும் மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது சீனா தைவான் மீது படையெடுத்தால் நேரடியாக இந்தியா சீனாவை எதிர்த்து களம் காணாவிட்டாலும் இமயமலை பிராந்தியத்தில் உள்ள எல்லை பகுதியில் சீனாவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தைவான் விவகாரத்தில் வலுவான கூட்டணி அமைத்து செயலாற்றி வருவதே சீனாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

அந்த நேரத்தில் தைவான் மீது சீனா படையெடுக்கும் போது இந்தியா சீன எல்லையோரம் தனது படைகளை குவித்து இரண்டாவது முன்னனியை உருவாக்குவதன் மூலமாக சீனாவின் கவனத்தை திசை திருப்ப நிச்சயமாக முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியா தெற்காசியாவில் மிகவும் வலுவான நிலையில் இருப்பதை இதற்காகவே அமெரிக்காவும் ஜப்பானும் அதிகமாக விரும்புவதாக எல்ப்ரிட்ஜ் கோல்பி கருதுகிறார்.

இதை போல அட்மிரல் மைக் கில்டே எனும் அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி அமெரிக்க வல்லுநர்கள் சீனா தென்சீன கடலில் ஜப்பான் அமெரிக்க கூட்டணி மற்றும் இமயமலையில் இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்து இரு முனை சிக்கலை எதிர்கொள்வதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.