தைவான் விவகாரத்தில் இந்தியா ஆதரவு தரும் என நம்புவதாக சீன தூதர் அறிக்கை !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on தைவான் விவகாரத்தில் இந்தியா ஆதரவு தரும் என நம்புவதாக சீன தூதர் அறிக்கை !!

தைவான் விவகாரத்தால் சீனா அமெரிக்கா இடையே மேலும் விரிசல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சுன் வெய்டாங் தைவான் விவகாரத்தில் இந்தியா ஆதரவளிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

அவர் பேசும்போது ஒரே சீனா கொள்கை சீனாவின் வெளிநாட்டு கொள்கையின் அடித்தளம் எனவும் இந்தியா சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிபடுத்த ஆதரவளிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

ஒரே சீனா கொள்கையை முதன்முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும் அந்த அடிப்படையில் பிரிவினைவாத தைவானுடயை கொள்கைகளையும் அதையொட்டிய அரசியலுக்கு இந்தியா ஆதரவளிக்காது என நம்புவதாகவும் அவர் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.