மலேசியாவில் அலுவலகம் திறக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் !!
1 min read

மலேசியாவில் அலுவலகம் திறக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் !!

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் மலேசியாவில் அலுவலகம் திறக்க அந்நாட்டை சேர்ந்த பாதுகாப்பு துறை நிறுவனமான Forte Drus உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் LCA இலகுரக போர் விமான திட்ட இயக்குனர் ரவி மற்றும் Forte Drus நிறுவனத்தின் சார்பில் ஒய்வு பெற்ற மலேசிய தரைப்படை அதிகாரி மேஜர் மொஹம்மது ஹூசைரி பின் மத் ஸைன் ஆகியோர் கையெழுத்து இட்டனர், Forte Drus நிறுவனம் மலேசியாவில் HAL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மலேசிய விமானப்படைக்கு இலகுரக போர் விமானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் மற்றும் மலேசிய விமானப்படையின் Su-30 MKM மற்றும் BAE Hawk பயிற்சி ஜெட் விமானங்களை பராமரிக்கும் ஒப்பந்தம் ஆகியவற்றை எளிதாக பெற வாய்ப்புகள் உள்ளது.

மேலும் மலேசிய விமானப்படைக்கு எதிர்காலத்தில் HTT-40 சுதேசி பயிற்சி ஜெட் விமானம், Dornier-228 விமானம், ALH Dhruv த்ரூவ் ஹெலிகாப்டர், இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் LCH ஆகியற்றை ஆஃபர் செய்வதும் ஒப்பந்தம் பெறுவதும் எளிதாகும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மலேசியாவில் அலுவலகம் திறப்பதன் மூலம் மலேசியா மட்டுமின்றி அந்த பிராந்தியம் அதாவது தென் கிழக்கு ஆசியாவில் தனது சேவைகளை பரப்ப மிகப்பெரிய உதவியாக இந்த நடவடிக்கை அமையும் என்றால் மிகையாகாது.