அக்னிபாத் திட்டத்தின் கீழ் கோர்க்கா வீரர்கள் நேபாளத்தில் இருந்து சேர்க்கப்படுவர் இந்திய அரசு !!

  • Tamil Defense
  • August 26, 2022
  • Comments Off on அக்னிபாத் திட்டத்தின் கீழ் கோர்க்கா வீரர்கள் நேபாளத்தில் இருந்து சேர்க்கப்படுவர் இந்திய அரசு !!

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதல் இன்று வரை நேபாளத்தில் இருந்து கோர்க்கா வீரர்களை தனது தரைப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்தி தேர்வு செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் முன்னர் நேபாளத்தில் இருந்து கோர்க்கா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது போல இனியும் ஆட்சேர்ப்பு நடைபெறுமா என்பது பற்றிய கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற வாராந்திர ஊடக சந்திப்பில் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேபாளத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்வது நிச்சயமாக நிறுத்தப்படாது,

ஆனால் இனி நேபாளத்தில் நடைபெறும் ஆட்சேர்ப்பு முகாம்கள் அனைத்துமே அக்னிபாத் முறையில் தான் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.