Breaking News

மீண்டும் இந்திய நீர்மூழ்கி கப்பல் டென்டரில் நுழையும் ஜெர்மனி !!

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on மீண்டும் இந்திய நீர்மூழ்கி கப்பல் டென்டரில் நுழையும் ஜெர்மனி !!

Project 75 India திட்டம் 75 இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்கு 6 டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க டென்டர் விடப்பட்டு இருந்தது.

இதில் ஜெர்மனியின் ThyssenKrupp Marine Systems, ஃபிரான்ஸின் Naval Group, ரஷ்யாவின் Rubin Design Bureau, ஸ்பெயினுடைய Navantia மற்றும் தென் கொரியாவின் Daewoo Shipping & Marine Engineering ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் நீர்மூழ்கி கப்பலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை கட்டும் இந்திய நிறுவனங்கள் பொறுபேற்க வேண்டியது இல்லை மாறாக தொழில்நுட்பத்தை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் எனும் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில்

தென்கொரியாவின் Daewoo மற்றும் ஸ்பெயின் நாட்டின் Navantia தவிர அனைத்து நிறுவனங்களும் டென்டரில் இருந்து விலகுவதாக அறிவித்தன, இதனால் இந்த திட்டத்தில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது.

ஆகவே சமீபத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த டென்டரில் சறுக்கல் ஏற்படுத்திய “Joint & Severe Liability” எனும் நிபந்தனையை நீக்கி ஒப்பந்தத்தை மறுசீரமைத்து அறிவிக்கை வெளியிட்டது.

இது முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தற்போது ஜெர்மனியின் ThyssenKrupp Marine Systems நிறுவனமானது மீண்டும் டென்டரில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கடற்படை சுமார் 3000 டன்கள் எடையும், ஏற்கனவே படையில் இணைக்கப்பட்ட Project 75 திட்டத்தின் கல்வரி ரக நீர்மூழ்கி கப்பல்களை விடவும் 30-35% வரை அதிக நீளம் கொண்ட கப்பல்களையே விரும்புகிறது.

அதிலும் குறிப்பாக AIP Air Independent Propulsion தொழில்நுட்பம் கொண்ட, சப்சானிக் மற்றும் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை செங்குத்தாக ஏவும் வசதி கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதில் இந்திய கடற்படை மிகவும் பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் ThyssenKrupp Marine Systems நிறுவனம் தனது Type212CD ரக நீர்மூழ்கி கப்பல்களை அளிக்க உள்ளதாக தெரிகிறது இதில் AIP தொழில்நுட்பம் இருந்தாலும் இதன் எடை 2500 டன்கள் மட்டுமே ஆகும், ஆகவே 3000 டன்கள் என்ற நிபந்தனையில் கடற்படை சமரசம் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.