இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் முதல்முறையாக ஜெர்மானிய போர் விமானங்கள் !!
ஜெர்மானிய விமானப்படையின் போர் விமானங்கள் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் முதல்முறையாக வந்துள்ளன இவை ஆஸ்திரேலியாவை நோக்கி ஒரு பன்னாட்டு கூட்டு பயிற்சிக்காக செல்கின்றன.
பதிமூன்று ஜெர்மானிய ராணுவ விமானங்கள் அதாவது 250 வீரர்கள் ஆறு யூரோஃபைட்டர் போர் விமானங்கள் மற்றும் ஏழு ராணுவ போக்குவரத்து விமானங்கள் ஆஸ்திரேலியா நோக்கி செல்கின்றன.
முதலில் ஆஸ்திரேலியா சென்று பன்னாட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கும் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன அங்கிருந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் சென்றுவிட்டு ஜெர்மானி நோக்கி திரும்பி செல்ல உள்ளன.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் நேட்டோவில் உறுப்பு நாடுகளற்ற மற்ற நட்பு நாடுகளுடன் இணைந்து செயலாற்றும் திறனை பரிசோதனை செய்வது ஆகும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2021 முதல் ஜெர்மனி இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் தனது இருப்பை அதிகரிக்கவும் அதன் பொருட்டு அதே மாதத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஜெர்மானிய கடற்படையின் போர் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.