ராணுவ கவச வாகனங்களின் உதிரி பாகங்கள் திருட்டு 4 பேர் கைது !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on ராணுவ கவச வாகனங்களின் உதிரி பாகங்கள் திருட்டு 4 பேர் கைது !!

மஹாராஷ்டிரா மாநிலம் பூனே நகருக்கு அருகாமையில் கண்டோன்மென்ட் நகரம் தான் கட்கி இங்கு தரைப்படையின் 512ஆவது தள பணிமனை அமைந்துள்ளது, இங்கு BMP-3 கவச வாகனங்களின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கு ஒப்பந்தம் பெற்றிருந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 4 பேர் கவச வாகனங்களுக்கான ரேடியேட்டர்கள் (Radiator) மற்றும் ஜெனரேட்டர் ஆர்மெச்சூர் (Generator Armature) ஆகியவற்றை தங்களது டெம்போ வாகனத்தில் உள்ள இருக்கையின் அடியில் ஒளித்து வைத்து திருடி செல்ல முயன்ற போது பிடிபட்டனர்.

இதனை தொடர்ந்து சுபேதார் மேஜர் அந்தஸ்திலான இடைநிலை அதிகாரி ஒருவர் கட்கி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதான நால்வரின் பெயர்களாவன; பிம்பிள் குராவ் பகுதியை சேர்ந்த சித்தபா பன்ஸோடே, அமோக்ஸித்தா கேஷவ் அதாவாலே, விகாஸ் அதிநாத் சபாலே மற்றும் போசாரி ஊரை சேர்ந்த மோஹன் உத்தம் ரஸ்கார் ஆகியோர் ஆவர்.

வழக்கை விசாரித்து வரும் காவல்துறை இணை ஆய்வாளர் கூறும்போது ராணுவத்தினர் இவர்கள் நால்வரும் அந்த பாகங்களில் உள்ள இரும்பு மற்றும் செப்பு உலோகங்களுக்காக திருடியதாக சந்தேகித்தாலும் வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என கூறினார்.