சுதந்திர தின அமுத பெருவிழா முப்படைகள் துணை ராணுவம் மாநில காவல்துறையினருக்கு சிறப்பு பதக்கம் !!
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைவதை ஒட்டி சுதந்திர தின அமுத பெருவிழா கொண்ட்டாங்கள் நாடு முழுவதும் களைகட்டி உள்ளன.
இதை முன்னிட்டு இந்த ஆண்டு அனைத்து முப்படை, துணை ராணுவ மற்றும் நாட்டின் அனைத்து மாநில காவல்துறையினருக்கும் சிறப்பு பதக்கம் ஒன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது பதக்கத்தின் புகைப்படம் அரசால் வெளியிடப்பட்டுள்ளது, இளநீல நிற துணியில் மூவர்ணம் உள்ளது, குப்ரோ நிக்கல் உலோகத்தால் செய்யப்பட்ட 35 மிமீ சுற்றளவு கொண்ட பதக்கத்தில் 75ஆவது சுதந்திர தின ஆண்டுவிழா என பொறிக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறப்பு பதக்கங்கள் மூன்று முறை வழங்கப்பட்டு உள்ளன, 1947ல் சுதந்திரம் அடைந்த போது பின்னர் 1972ல் 25ஆவது சுதந்திர தின ஆண்டுவிழா மற்றும் 1997ல் 50ஆவது சுதந்திர தின ஆண்டு விழா ஆகியவற்றின் போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.