இந்தியத் தரைப் படைக்கான முதல் செயற்கைகோள்

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on இந்தியத் தரைப் படைக்கான முதல் செயற்கைகோள்

இந்திய தரைப்படைக்கான பிரத்தியேக செயற்கைகோள் வருகிற 2025ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என பாதுகாப்பு அமைச்சக மற்றும் இந்திய தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை தங்களுக்கென பிரத்தியேக செயற்கைகோள்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்திய தரைப்படை அந்த செயற்கைகோள்களை தான் தனது தேவைக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்திய தரைப்படைக்கான பிரத்தியேக செயற்கைகோளுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அனுமதி அளித்தது, இந்திய தரைப்படையின் செயற்கைகோளுக்கு GSAT-7B என பெயரிடப்பட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த செயற்கைகோள் பல அலைவரிசைகளில் இயங்கும் திறன் மற்றும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பது அதன் சிறப்பாகும்.