இந்திய உச்சநீதிமன்றம் NDA National Defence Academy எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க உத்தரவிட்டதை அடுத்து அதற்கான தேர்வில் அவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் UPSC நடத்திய எழுத்து தேர்வில் வெற்றி பெற்று SSB நேர்முக தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மெரிட் அடிப்படையில் 19 பெண்கள் இறுதியாக தேர்ச்சி அடைந்தனர்.
இந்த 19 பெண்களும் NDA வின் 148ஆவது பயிற்சி பிரிவில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற உள்ளனர், இவர்கள் செவ்வாய்கிழமை தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தனர்.