300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெல்த் போர் விமானங்களை கூட கண்டறியும் சீனாவின் புதிய ரேடார் !!

  • Tamil Defense
  • August 26, 2022
  • Comments Off on 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெல்த் போர் விமானங்களை கூட கண்டறியும் சீனாவின் புதிய ரேடார் !!

சீனாவின் சிச்சவான் ஜியோஷ எலெக்ட்ரிக் குழுமத்தின் பொறியாளர்கள் ஒரு சிறிய அதிநவீன அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் அமைப்பை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் அமைப்பை கொண்டு 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழக்கமான விமானங்களையும், 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெல்த் போர் விமானங்களையும் அடையாளம் காணமுடியும் என கூறப்படுகிறது.

இது தவிர இந்த அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள லேசர் அமைப்பு மூலமாக விமானத்தை பற்றிய மிகவும் நுண்ணிய தகவல்கள் அதாவது எத்தனை ஜன்னல்கள் உள்ளன என்பது வரைக்கும் தகவல் சேகரிக்க முடியும் எனவும்,

மேற்குறிப்பிட்ட அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் கருவியை கொண்டு கிடைக்க பெறும் அகச்சிவப்பு புகைப்படம் மூலமாக எத்தனை என்ஜின்கள் உள்ளன, விமானத்தின் உடலமைப்பு போன்றவற்றை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டறிதல் கருவியானது விமானத்தில் இருந்து வெளியாகும் வெப்பத்தை கொண்டெ விமானத்தை கண்டறியும் மேலும் இது சிறிதாக இருப்பதால் கார்களில் கூட இணைத்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.