விமானிகள் இருக்கையில் பிரச்சனை F18, TYPHOON விமானங்கள் நிறுத்தம் !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on விமானிகள் இருக்கையில் பிரச்சனை F18, TYPHOON விமானங்கள் நிறுத்தம் !!

பிரிட்டிஷ் நிறுவனமான மார்ட்டின் பேக்கர் MARTIN BAKER போர் விமானிகளுக்கான பிரத்தியேக ஆபத்தில் தப்பிக்க உதவும் இருக்கைகளை தயாரித்து வருகிறது பல நாடுகள் இந்த நிறுவனத்தின் இருக்கைகளை பயன்படுத்தி வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து விமானப்படை, ஜெர்மன் விமானப்படை ஆகியவை MARTIN BAKER இருக்கைகள் பொருத்தப்பட்ட தங்களது EUROFIGHTER TYPHOON ரக விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

அதே போல அமெரிக்க கடற்படையும் தங்களது கணிசமான F/A -18 Hornet, Super Hornet, E/A-18G Growler ஆகிய போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது, இதற்கு காரணம் இருக்கைகளின் பூஸ்டர்களில் ஏற்பட்ட பிரச்சினை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்தந்த நாட்டு விமானப்படைகள் MARTIN BAKER நிறுவனம் ஆகியவை இணைந்து பல்வேறு நவீன சோதனைகளை மேற்கொண்டு பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையின் பல்வேறு முன்னனி போர் விமானங்களிலும் இந்த MARTIN BAKER நிறுவனத்தின் இருக்கைகள் பயன்படுத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.