லேசர் வழிகாட்டபட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on லேசர் வழிகாட்டபட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO Defence Research & Development Organisation ஆல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தான் LG-ATGM.

LG-ATGM Laser Guided Anti Tank Missile அதாவது லேசர் வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை நேற்று அர்ஜூன் மார்க் – 1 Arjun mk1 MBT இல் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

HEAT High Explosive Anti Tank ரக வெடிமருந்தை கொண்ட இந்த ஏவுகணை 1.5 முதல் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ERA Explosive Reactor Panelகள் பொருத்தப்பட்ட டாங்கிகளை Tandem Explosion முறை மூலமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை மஹாராஷ்டிரா மாநிலத்தின் அஹ்மேத்நகரில் உள்ள கவசவாகன படைப்பிரிவு மையத்தில் உள்ள இந்திய தரைப்படையின் கே கே ஆயுத பயிற்சி மையத்தில் நடைபெற்றது என்பது கூடுதல் தகவல் ஆகும்.