சுதந்திர தின விழா வரலாற்றில் முதல்முறையாக பயன்படுத்தப்பட உள்ள சுதேசி பிரங்கி !!
இவ்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திர தின விழா வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட DRDO ATAGS பிரங்கி பயன்படுத்தப்பட உள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் DRDO வின் ஒரு பியிவான ARDE ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்த பிரங்கி தான் ATAGS.
இந்த ATAGS அதிநவீன இழுவை பிரங்கி அமைப்பு Advanced Towed Artillery Gun System ஆனது 155 மில்லிமீட்டர் அளவுள்ள குழாய் அமைப்பு மற்றும் 52 காலிபர் திறனை கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் போது 21 பிரங்கிகள் முழங்க கொடி மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொடி மரியாதை அளிக்க DRDO ATAGS பிரங்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன, இதன் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பிரங்கி ஒன்று இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பெருமையை DRDO ATAGS பெற உள்ளது என்றால் மிகையாகாது.
வழக்கமாக மேற்குறிப்பிட்ட பணியில் பிரிட்டிஷ் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பான 25 பவுண்டர் பிரங்கிகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது இந்த ஆண்டு அவற்றுடன் ATAGS பிரங்கிகளும் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.