கடந்த மாதம் 28ஆம் தேதி இந்திய கடற்படைக்கான இரண்டு MH60 ROMEO நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை கடல்சார் ஹெலிகாப்டர்கள் அமெரிக்க விமானப்படையின் சிறப்பு விமானம் மூலமாக கொச்சி விமான நிலையத்தில் டெலிவரி செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக இந்தியா இத்தகைய 24 ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து சுமார் 2.6பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது அறிந்ததே இவை அனைத்தும் 2025ஆம் ஆண்டு வாக்கில் டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை ஹெலிகாப்டர்களின் வரவானது இந்திய கடற்படைக்கு மிகப்பெரிய அளவில் வலுசேர்த்து உள்ளதாகவும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையில் மிகச்சிறந்த ஹெலிகாப்டர் எனவும் இந்திய கடற்படை அதிகாரிகள் கூறினர்.
மேலும் வருகிற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இந்திய கடற்படைக்கு மற்றுமொரு MH60 ROMEO ஹெலிகாப்டர் டெலிவரி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது கூடுதல் தகவல் ஆகும்.