இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி DEFEXPO தேதி இடம் அறிவிப்பு !!

  • Tamil Defense
  • August 10, 2022
  • Comments Off on இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி DEFEXPO தேதி இடம் அறிவிப்பு !!

இந்த ஆண்டு 12ஆவது பாதுகாப்பு கண்காட்சி DefExpo நடைபெற உள்ளது, தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதற்கான இடம் தேதி ஆகியவற்றை பற்றிய அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிவிக்கையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி நடைபெறும் எனவும்,

இந்த 5 நாட்கள் கண்காட்சியில் பொதுத்துறை தனியார் துறை நிறுவனங்கள் தயாரித்த தரைப்படை விமானப்படை கடற்படை ஆகியவை சாரந்த ஆயுத தளவாடங்கள் காட்சிபடுத்தப்படும் மேலும் அவற்றின் செயல்திறன் காட்சிபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியானது ஹெலிபேட் கண்காட்சி மையம், மஹாத்மா மந்திர் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மையம் மற்றும் சபர்மதி ஆற்றங்கரை முகப்பு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.