துருக்கி அட்டுழியத்தை எதிர்கொள்ள இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் சைப்ரஸ் !!
சைப்ரஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இஸ்ரேலிடமிருந்து Iron Dome ஐயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு வாங்குவதற்கான நடைமுறைகளை செயல்படுத்தி வருவதாக அந்நாட்டை சேர்ந்த காத்திமெரினி எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே இது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்து இட்ட நிலையில் தற்போது இஸ்ரேலும் மேற்குறிப்பிட்ட Iron Dome ஐயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளை சப்ளை செய்வதற்கான பணிகளை துவங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது துருக்கியின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத பகுதியான வடக்கு சைப்ரஸ் அல்லது துருக்கியில் இருந்து அனுப்பப்படும் ஆளில்லா விமானங்கள் அல்லது வான் சார்ந்த அத்துமீறல்களை எதிர்கொள்ள சைப்ரஸ் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க உள்ளது.
70 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட ஒரே ஒரு ஐயன் டோம் அமைப்பு ஒட்டுமொத்த சைப்ரஸ் தீவையும் கண்காணிக்கும் திறன் கொண்டதாகும் ஆனால் சைப்ரஸ் அரசு மொத்தத்தில் எத்தனை ஐயன் டோம் அமைப்புகளை வாங்க திட்டமிட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்வில்லை.
வடக்கு சைப்ரஸ் பகுதியில் துருக்கி மிகப்பெரிய அளவில் ராணுவத்தை நிலைநிறுத்தி உள்ளதும் 1974 போரில் இந்த பகுதியை படையெடுத்து உடைத்ததும், அதன்பிறகு தன்னாட்சி வழங்கப்பட்ட நிலையில் 1983ல் வடக்கு சைப்ரஸ் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டபோது அதனை துருக்கி மட்டுமே அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
துருக்கி மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் பல்வேறு அடாவடிகளில் ஈடுபட்டு வருகிறது இதனால் கீரிஸ் நாடும் சைப்ரஸ் நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய சக்தியாக கருத்ப்படும் இஸ்ரேலுடன் மேற்குறிப்பிட்ட நாடுகள் கூட்டணி அமைத்து முத்தரப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.