தைவானில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் தாக்குதல் நீர்மூழ்கிகள் !!

  • Tamil Defense
  • August 13, 2022
  • Comments Off on தைவானில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் தாக்குதல் நீர்மூழ்கிகள் !!

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ கடற்படை தைவானில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் தனது புதிய டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தைவானுடைய வடமேற்கு கடலோர பகுதியில் தான் சீன கடற்படையின் புதிய Type-093A Yuan யுவான் ரக நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளது ஆனால் எத்தனை என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.

இந்த Type-093A ரக நீர்மூழ்கி கப்பல்களில் Air Independent Propulsion என்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய செங்குத்தாக ஏவுகணைகளை ஏவும் அமைப்பு Vertical Launch Cells VLS ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மட்டுமின்றி சீன மக்கள் விடுதலை ராணுவ கடற்படையானது சில மேம்படுத்தப்பட்ட ரஷ்ய தயாரிப்பு கீலோ ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களையும் மேற்குறிப்பிட்ட நீர்மூழ்கி கப்பல்களுடன் நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.