இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஊடுருவிய சீன ராக்கெட் !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஊடுருவிய சீன ராக்கெட் !!

சீனா முன்னர் ஏவிய Long March 5B (CZ 5B) எனப்படும் ராக்கெட் நேற்று காலை 10.45 மணியளவில் இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஊடுருவி உள்ளது.

இந்த செய்தியை அமெரிக்க விண்வெளி படை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்துள்ளது, ராக்கெட் பூமியில் விழும் இடம் போன்ற தகவல்களை சீனா வெளியிட வேண்டும் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே மஹராஷ்டிரா மாநிலத்தில் சீனா இதே போல் ஏவிய ராக்கெட் ஒன்று வளிமண்டலத்தை ஊடுருவி எரிந்து போன பாகங்கள் விழுந்ததும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.