Breaking News

பூமியில் மீண்டும் விழுந்த சீன ராக்கெட் !!

  • Tamil Defense
  • August 3, 2022
  • Comments Off on பூமியில் மீண்டும் விழுந்த சீன ராக்கெட் !!

சீனா சில மாதங்களுக்கு முன்பு ஏவிய Long March – 5B (CZ-5B) எனப்படும் ராக்கெட்டின் பாகங்கள் விரைவில் பூமியை நோக்கி விழலாம் என அமெரிக்க விண்வெளி படை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்தபடியே இந்திய பெருங்கடல் பகுதிக்கு மேலே வளிமண்டலத்திற்குள் சீன ராக்கெட்டின் பாகங்கள் ஊடுருவின, இதில் அதிக வெப்பம் காரணமாக அவை வானிலேயே எரிந்தன.

இந்த நிகழ்வு தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் குறிப்பாக மலேசியா இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் தெள்ளத்தெளிவாக காட்சியளித்தது.

இது பற்றி சீன அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, விண்வெளி நிபுணர்கள் இதுபற்றி கூறும்போது வேறேந்த நாடும் இப்படி பாதுகாப்பு இன்றி ராக்கெட் பாகங்களை விண்வெளியில் விடுவதில்லை என தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்கள் முன்னர் இதே போல சீன ராக்கெட் ஒன்றின் பாகங்கள் வளிமண்டலத்தை ஊடுருவி இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.