ஆஸ்திரேலியாவில் ஆட்டு பண்ணையில் விழுந்த அமெரிக்க ராக்கெட்டின் பாகங்கள் !!

  • Tamil Defense
  • August 2, 2022
  • Comments Off on ஆஸ்திரேலியாவில் ஆட்டு பண்ணையில் விழுந்த அமெரிக்க ராக்கெட்டின் பாகங்கள் !!

பிரபல அமெரிக்க தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கின் நிறுவனம் தான் SPACE-X இந்த நிறுவனம் ஏவிய ராக்கெட் ஒன்றின் பாகங்கள் ஆஸ்திரேலியாவில் விழுந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் ஜின்டாபைன் பகுதிக்கு தெற்கே உள்ள நும்ப்லா வேல் பகுதியில் மிக் மைனர்ஸ் என்ற விவசாயி ஒருவருக்கு சொந்தமான ஆட்டு பண்ணையில் மூன்று மீட்டர் நீளமுள்ள SpaceX நிறுவனத்தின் SpaceX Dragon ராக்கெட் ஒன்றின் பாகம் விழுந்தது.

இந்த ராக்கெட் பாகம் வளிமண்டலத்தை அதிக வேகத்தில் ஊடுருவிய போது ஏற்பட்ட வெடித்தல் போன்ற சப்தம் அல்பரி, வகா வகா, கான்பரா போன்ற தொலைதூர பகுதி மக்கள் தெளிவாக கேட்க முடிந்தது என கூறப்படுகிறது.