இலங்கை சென்றடைந்த சீன கண்காணிப்பு கப்பல் அமோக வரவேற்பு !!

  • Tamil Defense
  • August 16, 2022
  • Comments Off on இலங்கை சென்றடைந்த சீன கண்காணிப்பு கப்பல் அமோக வரவேற்பு !!

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கண்காணிப்பு கப்பல் Yuan Wang 5 யுவான் வாங் -5 சென்றடைந்துள்ளது அங்கு கப்பலுக்கு இலங்கை அரசு சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கப்பல் எவ்வித கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளாது என சீனா உறுதி அளித்ததின் பேரிலேயே அனுமதிக்கப்பட்டதாக இலங்கை அரசு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன, ஆகஸ்ட்22 ஆம் தேதி வரை இந்த கப்பல் இலங்கையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த யுவான் வாங் -5 , Yuan Wang – 5 கப்பலானது, சீனாவின் மிகச்சிறந்த அதிநவீனமான கண்காணிப்பு கப்பல்களில் ஒன்று எனவும் விண்வெளி, செயற்கைகோள்கள், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது என பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த கப்பல் இலங்கை வர போகிறது என தகவல் கசிந்த உடனேயே இந்தியா பலத்த எதிர்ப்பை பதிவ செய்திருந்தது இதனையடுத்து காலவரையின்றி இந்த கப்பல் வர இலங்கை அனுமதி அளிக்க மறுத்த நிலையில் தற்போது இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் இலங்கைக்கு வர அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.