சமீபத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெனி விமான நிலையத்தில் சீன ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கியதாகவும்,
அந்த விமானத்தில் இருந்து சீன ராணுவ வீரர்கள் 50 பேர் பல பெட்டிகளை சுமந்து கொண்டு இறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சீன கடற்படை மற்றும் சீன தரைப்படையை சேர்ந்த வீரர்கள் ஈரானிய ராணுவத்தினருடன் இணைந்து சென்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இது உறுதிப்படுத்தப்படாத செய்தியாக இருந்தாலும் கடந்த காலத்தில் சீன படையினர் ஈரானுக்கு செல்வது சாதாரண நிகழ்வாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.